திங்கள், 25 ஜூன், 2012

muthal seethanam paadalgal

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல..........

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............

ஆசை உன்மேல் வச்சதுக்கு..............
அடிச்ச அடியும் வலிக்கலையே,
நியும் ஒதுக்கி வேருத்ததான்................
இந்த நெஞ்சும் பொறுக்கலையே,
எப்போதுதான் மாறுமோ................
காதல் தடை மீறுமோ,
எப்போதுதான் மாறுமோ..................
காதல் தடை மீறுமோ,

அனல் வந்து அடிக்குதடி
என் உள்ளம் கொதிக்குதடி
பூவான என் மனசும் புண்ணாகி போனதடி
புண்ணாகி போனதடி

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............

காதல் வந்த நாள் முதலா.......................
என்னை நானே மறந்துவிட்டேன்,
உனது விருப்பம் தெரியாம......
மனச நானும் பறிகொடுத்தேன்,
சிந்தை கேட்டு போனது...................
செத்தும்  உடல் நோவுது,
சிந்தை கேட்டு போனது.....................
செத்தும்  உடல் நோவுது,
ஆத்தாடி மனுஷனுக்கு......................
ஆகாது பொண்டு வழக்கு
ஏத்தாத குத்துவேலக்கு...................
சுட்டாக்க யார் பொறுப்பு
சுட்டாக்க யார் பொறுப்பு

எட்டுமடிப்பு சேல...................
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல...............
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு  _ காதல்
பட்டம் கொடுத்தது எனக்கு _ இன்னும்
பாதியில் நிக்குதே வழக்கு............


பெண்:
சுத்த  சம்பா என்  மச்சான் நெல்லு குத்தி
சோறு பொங்கி வந்திருக்கேன்
சுந்தரிதான் நான் உன் சுந்தரிதான்
சொக்கி இப்போ நின்னுருக்கேன்

ஆண்:
வருவியா பக்கம் வருவியா
பெண்:
 ஏய்..............
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................
பெண்:
ஓடையிலே குளிருதையா என் உடம்பு
ஆண்:
 ஏய்..............
பெண்:
மனசு கொதிப்புலத்தான் உருகுதையா  புதுக்கரும்பு
ஆண்:
மூடி வச்சி வெளுத்திருக்கும் பனங்கெழங்கு
எடுக்க மூங்கில் மாற காட்டுக்குள்ள  நீ ஒதுங்கு
பெண்:
போடிசாம தோப்புக்குள்ள பேசயிலே
கோரஸ்:
ஆமா பேசையில
பெண்:
எனக்கு அடிக்காம சிலுக்குதையா ஆசையில
ஆண்:
குருத்தோல விரிஞ்சிடுச்சி தென்னையில
கோரஸ்:
ஆமா தென்னையில
ஆண்:
வெளுத்த புதுச்சோளம் வெலஞ்சிருச்சி பண்ணையில
கோரஸ்:
ஆமா பண்ணையில
ஆண்:
கேய் வருவியா பக்கம் வருவியா
பெண்:
ஆகா....................
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................
ல ல ல ல ல ல ல ல
ஆண்:
ஹே மாம்பழம்தான் தோப்புக்குள்ள பழுத்திருக்கு
பெண்:
ஏய்,
ஆண்:
பழுத்து மதமதன்னு வெதவெதன்னு கொழுத்திருக்கு............
பெண்:
வானத்துல மேகம் கொஞ்சம் கருத்திருக்கு
பழுத்த மல்லிகப்பூ பாயி ஒன்னும் விரிச்சிருக்கு
ஆண்:
அட விவகாரம் புடிச்சதம்மா வெடலப்புள்ள
பெண்:
ஏய்,
கோரஸ்:
ஆமா வெடலப்புள்ள
ஆண்:
வெரச்சா வேரசாத்தன் காய்க்கும் இந்த கடலக்கொள்ள
பெண்:
மலையோரம் சூரியனும் சாய்ஞ்சிடுச்சி
கோரஸ்:
ஆமா சாய்ஞ்சிடுச்சி
பெண்:
என மருதாணி குருவி ரெண்டும் சேர்ந்திடுச்சி
கோரஸ்:
ஆமா சேர்ந்திடுச்சி

பெண்:
சுத்த  சம்பா என்  மச்சான் நெல்லு குத்தி
சோறு பொங்கி வந்திருக்கேன்
சுந்தரிதான் நான் உன் சுந்தரிதான்
சொக்கி இப்போ நின்னுருக்கேன்

ஆண்:
வருவியா பக்கம் வருவியா
பெண்:
 ஏய்..............
ஆண்:
தருவியா முத்தம் ஒன்னு தருவியா
பெண்:
ஆகா....................



ஆண்:
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே

உயிரிலே உன் பெயரை எழுதினேன்
அருகிலே இல்லையென்று உருகினேன்
மலையிலே செம்பருத்தி மலையிலே
அலைகிறேன் இன்று ஒரு முடிவிலே
என் அன்பே என்னென்பேன்
என் ஆசை வீண் என்பேன்
காதல் மனதின் பாரமே சேரும் கடிதம் கூறுமே
நாளை விடியும் நேரமே
நதியில் என் உடல் மிதக்குமே

பெண்:
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே

மனதினை தந்துவிட துடிக்கிறேன்
விழிகளில் துன்ப மழை வடிக்கிறேன்
விதியினை வென்றுவிட நினைக்கிறேன்
நதியிலே உன்னுடனே குதிக்கிறேன்
என் அன்பே என் நெஞ்சே
நீ எங்கே நான் அங்கே
காதல் கணவாய் போவதா
கானல் நீராய் ஆவதா

வா வா உயிரே வா
வாசல் திறந்தேன் வாழ வா
ஒ நெஞ்சமே உயிரே  தஞ்சமே
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்

திங்கள், 14 மே, 2012

பூக்களைத்தான் பறிக்காதீங்க (பூக்களைபரிக்கதீர்கள்)

பூ ஒன்னு வாடுதம்மா..............
அதன் ஜோடி பூவ தேடுதம்மா..............
வெளி ஒன்னு தடுக்குதம்மா...........
அதன் விழிகளும்தான் தவிக்குதம்மா....................

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
கண்களும்தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

கூட்டுக்குள் பறவை வச்சான் 
வானத்தில் நிலவ வச்சான் 
மலருக்குள் தேன வச்சான் 
மதுவுக்குள் போதை வச்சான் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 
மனசுக்குள் காதல் வச்சான் 
மனுஷன் தான் அதன பிரிச்சன் 

இயற்க்கை அவன் படைக்கியில 
இடையில் இவன் பிரிப்பதென்ன 
இளமனசு தவிக்கையில 
இரக்கமற்று தடுப்பதென்ன 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

செடி வலந்தா பூவா பூக்கும் 
பூ பூத்தா காயா காய்க்கும் 
காய் கணிஞ்சா பழமா ஆகும் 
பழம் விரிஞ்சா விதையா தூவும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
வித மீண்டும் பூவக்கொடுக்கும் 
பூ மீண்டும் விதய கொடுக்கும் 
இதுவும் ஒரு சக்கரம் அய்யா 
இத நிறுத்த முடியாதையா 
அத போல காதலும் அய்யா 
அத தடுக்க முடியாதையா 
கண்களும் தான் பார்த்துக்கொண்டா 
காதல் அங்கே ஊட்ற்றேடுக்கும்
இதயம் அத கொடுத்துவிட்டா 
யார் தடுத்து அதுவும்  நிற்கும் 

பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 
பூக்களைத்தான் பறிக்காதீங்க 
காதலைத்தான் முறிக்காதீங்க 

விழிகள் மேடையாம் (பூக்களைபரிக்கதீர்கள்)


பெண்:
                         பா ப பா ப பா ப 
ஆண்:
                         பா ப பா ப பா ப 
பெண்:
                         லா ல லா ல லா ல 
ஆண்:
                          லா ல லா ல லா ல 
பெண்:
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
பெண்:
                           ஹா..................
ஆண்:
                         ஜூலி ஐ  லவ்   யு 
 பெண்:
                           ஹா..................
ஆண்:                 
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்   யு   
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்  யு   
பெண்:
                         மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் 
                         மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் 
                         மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் 
                         மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம் 
                         மன வீணையிலே நாதமீட்டி கீதம் மாகி நீந்துகின்ற தலைவா 
                        இதழ் ஓடையிலே வார்த்தை என்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
                        விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                        விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                        பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
பெண்:
                           ஹா..................
ஆண்:
                         ஜூலி ஐ  லவ்   யு          
பெண்:
                           ஹா..................
பெண்:
                         நினைவென்னும் காற்றினிலே 
                          மனமென்னும் கதவாட 
                         தென்றலென வருகைதரும் கனவுகளே  
                         உன் நினைவென்னும் காற்றினிலே          
                         மனமென்னும் கதவாட 
                         தென்றலென வருகைதரும் கனவுகளே  
                         மது மாலையிலே மஞ்சள் வெயில் 
                         கோலமேனும் நெஞ்சம் அதில் நீ வீச 
                         மனசோலையிலே வட்டமிடும் 
                         வாசமேனும் உள்ளமதில் நீ பொங்க
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         விழிகள் மேடையாம் -  இமைகள் திரைகளாம்  
                         பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம் ஒ ஒ ஒ.........
ஆண்:
                          ஜூலி ஐ  லவ்   யு 
                         ஜூலி ஐ  லவ்   யு 
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்   யு   
பெண்:
                           ஹா..................
                         பா ப பா ப பா ப பா ப 
                         ஜூலி ஐ  லவ்  யு   
பெண்:
                           ஹா..................

காதல் ஒருவழி பாதை பயணம் (பூக்களைபரிக்கதீர்கள்)


கிளை இல்லா மரங்களில் நிழல் தேடும் மனங்களே 
அழிவில்ல காதலில் அழிகின்ற மலர்களே 
ஆ ஆ.....................அழிகின்ற மலர்களே 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
மேகங்கள் போட்டிடும் கோலம் 
அது காற்றினில் கலந்திட சோகம் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் விதி அவன் சிதைத்திடும் கனவோ 
காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 

கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கோடையில் காய்ந்திடும் நதிகள் 
எந்த நிலையிலும் காயாத விதிகள் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கதை சாகின்ற வரையும் தொடரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 
கட்டை வேகின்ற போதும் மலரும் 

காதல் ஒருவழி பாதை பயணம் 
அதில் நுழைவது என்பது சுலபம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
பின்பு திரும்பிட நினைப்பது பாவம் 
அது ஆற்றிட முடியா காயம் 
காதல் ஆற்றிட முடியா காயம் 

மாலை எனை வாட்டுது (பூக்களைபரிக்கதீர்கள்)



ஆண்:
                        மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது 
பெண்:
                        மாலை எனை வாட்டுது - மன நாளை மனம் தேடுது 
ஆண்:
                        நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
பெண்:
                        நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
ஆண்:
                        மாலை எனை வாட்டுது 
பெண்:
                        மன நாளை மனம் தேடுது 
ஆண்:
                        விழிவாசல் தேடி நீ கோலம் போட
                        வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட 
                        விழிவாசல் தேடி நீ கோலம் போட
                        வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட 
                        மயில் உன்னை தழுவ விரும்புகிறேன் 
                        குயில் தனை இழந்து புலம்புகிறேன் 
                        இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காத 
                        தாகமும் தனியாதா எந்தன் மோகமும் தீராதா 
பெண்:
                        மாலை எனை வாட்டுது 
ஆண்:
                        மன நாளை மனம் தேடுது 
பெண்:
                        உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
                        உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால் 
                        உன்கோவில் சேர பூத்திட்ட பூ நான் 
                        உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால் 
                        நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் 
                        நீ வந்து நின்றால் அது சுகமாகும் 
                        தலைவனை அழைத்திடவா 
                        மடியை தலையணை ஆக்கிடவா 
                        இருகரம் சேர்த்திடவா இல்லை 
                        எனையே ஈர்த்திடவா 
ஆண்:
                       மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது 
பெண்:
                       மாலை நமை வாட்டுது - மன நாளை இமை தேடுது 
ஆண்:
                       நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
பெண்:
                       நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ 
ஆண்:
                       மாலை நமை வாட்டுது 
பெண்:
                        மன நாளை இமை தேடுது 

சோலைகளெல்லாம் பூக்களைதூவ(பூக்களைபரிக்கதீர்கள்)


ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                        குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
                       குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஒ ஒ ...........
பெண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        விழி எனும்...............அருவியில் 
                        நனைகிறேன்.................குளிர்கிறேன் 
பெண்:
                        
                        கவியெனும்..................நதியினில்.............
                        குதிக்கிறேன்.............குளிக்கிறேன்..............
ஆண்: 
                        மரகதவீணை உன் சிரிப்பிலே,
                        மயக்கிடும் ராகம் கேட்க்கிறேன்,
பெண்:
                        மன்னவன் உந்தன் அணைப்பிலே 
                        மான் என நானும் துவழ்கிறேன்
ஆண்:
                        வாழை இலை போலே நீ ஜொலிக்கிறாய்....................
பெண்:
                        காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்.............
ஆண்:
                        காதல் ஊர்வலம் இங்கே...............
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே..............
ஆண்:
                        காதலி.....அருகிலே இருப்பதே.........ஆனந்தம் 
பெண்:
                        காதலன்...........மடியிலே கிடப்பதே........பரவசம் 
ஆண்:
                        நச்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா ஹ ஹ 
                        மின்னி மின்னி என்னை பரிக்கிதா 
பெண்: 
                        புத்தகம்போல் தமிழை சுமக்கிறாய் 
                        பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய் 
ஆண்:
                        நீ வெக்கத்தில் படிக்க மறுக்குறாய் 
பெண்:
                         நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய் 
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........த த ததாதா தா ..து து து
பெண்:
                        கன்னி மாதுளம் இங்கே......த த ததா த த ததா
ஆண்:
                        சோலைகளெல்லாம் பூக்களைதூவ சுகம் சுகம் ஆஆ ..........
பெண்:
                         குயில்களின் கூட்டம் பாடலை பாட இதம் இதம் ஆஆ ..........
ஆண்:
                          காதல் ஊர்வலம் இங்கே........ப ப ப ப 
பெண்:
                          கன்னி மாதுளம் இங்கே......ர ர ர ரூ ரூ ரூ ரூ 

பூக்களைபரிக்கதீர்கள் (மானே-தேனே)

ஆண்:
                மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற 
                நீதானே என் வானம் அம்மம்மம்மா 
                நீதானே என் கானம் அம்மம்மம்மா 

                நீதானே என் வானம் அம்மம்மம்மா
                நீதானே என் கானம்  அம்மம்மம்மா
                 மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 

               ஹேய்ஹேய்...............
               விழிஜன்னலை மூடாது வைத்தாய் காற்றாக நான் துடித்தேன் 
               கடைக்கண்களை என்மீது சாய்த்தாய் நெஞ்சத்தை நான் தொலைத்தேன் 
               தொலைத்திட்ட என் நெஞ்சை............ உன்னிடம்  காண்கின்றேன் 
               உய்ரோடு நான் வாழ-உன்நெஞ்சை கேட்க்கின்றேன் 
               தருவாய் நீ என்று....தவமே புரிகின்றேன் 
               வருவாய் நீ என்று வாசல் திறக்கின்றேன் 
               நீதானே என் ராகம் அம்மம்மம்மா
               நான்தானே உன் தாளம் ததிகின ததிகின தோம்,

               உலகேன்பதும் உறவென்பதும் நானும் நீயும்தான் 
               வாழ்வென்பதும் சாவென்பதும் உந்தன் நிழலில் தான் 
               ஜென்மங்கள் எடுப்போமே...ஒன்றாக நாம் சேர...
               சந்தங்கள் படிப்போமே பந்தங்கள் தான் தொடர 
                தேவதை வாழ்த்தட்டுமே காதலை போற்றட்டுமே
               
               ,மானே த த த த ததா...............
                தேனே து து துது துது................... 
                உன் இருவிழி மடல்களிலே என் இலக்கியம் உருவாக 
                உன் அபிநய அரங்கினிலே என் காவியம் அரங்கேற 

புதன், 28 மார்ச், 2012

sundaraa travels



நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல 
லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
ஒரு குறையும் இல்லா பேரழகே உன் கோபம் கூட ஓர் அழகே 
உன்னை ஓதும் பனி காற்றும் உரையாதோ ...........
தேவதையே தேவதையே உன் வார்த்தைகள் கார்த்திகை தீபங்களே 
கண் இமைக்கும் வெண்ணிலவே உன் நாணங்கள் மார்கழி கோலங்களே கோலங்களே ...........
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தங்களே லால்லா லல லால்லா

முல்லை மலரில் உளி எடுத்து தென்றல் காற்றை செதுக்கி சிலையாய் உனை வடித்தான் 
அந்தி வெயிலை அள்ளி எடுத்து உந்தன் மேனியில்  வண்ணம் அழகாய் தீட்டிவிட்டான்
கொலுசுகள் சொல்வதை மொழிபெயர்த்தால் தமிழ் இன்னொரு காவியம் பார்த்திடுமே 
உன்னை உடுத்திய ஆடை செய்த்தது ஆய்ரம் கோடி புண்ணியமே 
அதிசயமே................அதிசயமே உனை பெண் எனவே பூமியில் இறைவன் படைத்துவிட்டான் 
இமைத்திட மறந்து பார்த்து நின்றான் 
அழகிய அஜந்தா சிர்ப்பமெல்லாம் உன்னை பார்த்தால் உயர்தேழும்மே 
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா

உந்தன் கூந்தல் தங்க ஊஞ்சல் அதில் ஆடிட தானே பூக்கள் மலர்கிறது 
அதி காலை உனை போல ஒரு புன்னகை செய்ய நாளும் முயல்கிறது 
பைங்கிளி உன் இரு பாதங்கள் தீண்டிட புள் வெளி எல்லாம் தவம் கிடக்கும் 
கண்மணி உணக்கொரு கை குட்டை வழங்கிட தாமரை பூதான் இதழ் விரிக்கும் 
பூங்கொடியே ............பூங்கொடியே உனை பார்த்தவுடன்,
வெயிலும் பணியாய் குளிர்கிறதே கதிரும் நிலவாய் தெரிகிறதே 
பண்டிகை காலம் போல் இந்த பூமியை மாற்றிய தேவதையே 
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா
நீ சந்தனம் பூசிய சென்பகமே லால்லா லல லால்லா
உன் மௌனமும் இன்னிசை சந்தந்களே லால்லா லல லால்லா

ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் 
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன் 
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன் 
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன் 
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......
பெண்:
லலலா லல லலலா லலலா லல லலலா 
பெண்:
வெண்ணிலவின் அழகு முன்னழகு அதை ஊர் அறியும் 
பின்னழகு என்பது எப்படியோ அதை யார் அறிவாய் 
ஆண்:
முன்னழகு எப்போதும் அழகென்று இங்கு உள்ளதென்றால் 
பின்னழகும் நிச்சயம் அழகுதான் அதை நான் அறிவேன் 
பெண்:
அஞ்சி மணி ஆனா ஒரு நோட்டம் விடவா..............
தூது ஒன்னு போட்டு நல்ல தீட்டம் தரவா...........
பெண்:
போதும் இன்ப வேலை கண்களாலே லீலை 
ஆண்:
சிணுங்காத பெண்களெல்லாம் அட
 உயிருள்ள பெண்கள் இல்லை
பெண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் .............
ஆண்:
வானத்துலே ஒரே வெண்ணிலவு அங்கு உள்ளதடி,
பூமியிலே இரண்டு வெண்ணிலவு இன்று வந்ததடி ............
பெண்:
சூரியனின் வெளிச்சம் பூமி தொட முன் நூறு நொடி.....
உந்தன் விழி என் உயிர்தொட்டுவிட அட ஒரு நொடி...........
ஆண்:
பேரழகு பெண்ணே அடி நீதான் நீதான்.........
பெண்:
புகைப்படம் எடுப்பேன் ரெண்டு கண்ணால் உனைத்தான் 
ஆண்:
வெக்கம் என்னும் வார்த்தை பெண்களுக்கு வாழ்க்கை 
பெண்:
சொல்லாலே சொக்க வைத்தாய் என்னை சொர்க்கத்தில் 
நிர்க்கவைத்தாய் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் 
பெண்:
அடடா ஊர்வலத்தில் வானவில்லும் ஓடக்கண்டேன் 
அதுதான் பூங்குயிலாய் பாட்டெடுத்து பாடக்கண்டேன் 
ஆண்:
மெதுவாய் மேகமெல்லாம் அங்கும் இங்கும் போககண்டேன் 
பெண்:
பொதுவாய் ஈரநிலா என்னை கண்டு நானாகண்டேன் 
ஆண்:
அடடா ஊர்குளத்தில் தாமரை பூ ஆடகண்டேன் 
அதுதான் காதலனை ஓரக்கன்னால் தேடக்கண்டேன் ஹோய் ......

karisakaatu penne


பெண்:

                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
                          என் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                          என் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
                          கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான் 
                          என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே  சென்றான் 
கோரஸ்:
                          உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                          உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
பெண்:
                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
பெண்:
                          ஓ........... ஒருமுறை பார்த்தாய் உய்ர்வரை வேர்த்தேன்
                          அசைவத்தில் ஆசை அதிகம் என்னை தின்றானே............. 
                          ஓ............... அவன் மட்டும் இங்கே ஒரு நொடி வந்தால் 
                          அரைடசன் பிள்ளை பெட்டரு கையில் தருவேனே............ 
                          அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும் 
                          அவன் மார்பின் முடிகள் பிடிக்கும் 
                          ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும் 
                          கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும் 
                          என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்க்காச்சே
                          அவன் ஒரு விரல் தீண்டி நோருன்கிடவே நான் உய்ரை வளர்த்தேனே 
                          கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                          கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே      
                         ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ 
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே 
                         ஹோ ஹோ ஹோ .........ஹோ ..........ஹோ 

ஆண்:                         
                         தாமரை பெண்ணே தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு 
பெண்:
                         புது கைவளை ஒலி அவன் காதினில் கேட்க்கும் வைகறை பெண்ணே காத்திரு 
பெண்:
                          ஓ ..............வருசங்கள் எல்லாம் நிமிஷங்கள் ஆக,
                          அவன் வருவான் என்று காத்திருந்தேன் 
                          ஓ .............அவன் குரல் கேட்க்கும் திசைகளில் எல்லாம் 
                          புது புது கோலம் போட்டுவைத்தேன் 
                          என் தாவணி வயசுகள் போச்சி 
                           ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சி
                           அந்த ராட்ச்ச சன் என் வரவில்லை 
                           இன்னும் பூக்குடை சாய்ந்திடவில்லை 
                           என் இருபது போகும் எழுபதும் ஆகும் 
                           அவனை விட மாட்டேன் 
                           என் மடியினில் ஒருநாள் தலை வைத்து தூங்கும் 
                           அழகை நான் பார்ப்பேன் 
                           கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
                           கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
கோரஸ்:
                           உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                           உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா 
பெண்:
                           கொஞ்சம் கனவு கொடுத்தவன் என் தூக்கம் திருடி சென்றான் 
                            என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே  சென்றான்
கோரஸ்:
                            உன் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
                            உன் இருதய நரம்பினை  அறுத்தவன் எவனோ அவனை கண்டாயா \

வியாழன், 22 மார்ச், 2012

intha maamanoda manasu

பெண்:
                                   இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                   இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
                                   குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                   சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                                
                                   ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                   இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
ஆண்:
                                    
                                   ஆக்களின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் 
                                   மனசில் இப்போ அல்லாடிகிடக்குற ஆசையை நான் முடிப்பேன் 
பெண்:
                                   விரும்பியது எந்நேரம் கிடைக்கிற போது ஒரு ஏக்கம் நெஞ்சில் ஏது
ஆண்:
                                   எல்லோர்க்கும் நினைத்தது போலே மன வாழ்க்கை  வாய்த்திடாது
பெண் 
                                  எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன் 
ஆண்:
                                  இப்போது நான் அதை கண்டு பிடித்தேன் 
பெண்:
                                  கெட்டி மேளம் நேரம் கூட மாமனோட,
ஆண்:
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
                                  குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                  சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                                  
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
                                  பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்      
                                  மணவறையில் கண்ணாலே உனக்கொறு நன்றியை நான் உரைப்பேன் 
ஆண்:
                                  எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈராமாகும்
பெண்:
                                  கல்யானக்கனவுகள் யாவும் கையில் சேரும் நேரமாகும் 
ஆண்:
                                  பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் 
பெண்: 
                                  வண்டாட்டம் பறந்திடும் வஞ்சிமனதும் 
ஆண்:
                                  மஞ்சதாலி மார்பில் ஊஞ்சல் ஆடும் மாமனோட,
பெண்:
                                  ஹேய் மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
ஆண்:
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........
பெண்:
                                  குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது 
                                  சொல்லவார்த்தை.......... ஏதும் இல்லை மாமனோட,
                        
                                  இந்த மாமனோட மனசு மல்லிகைப்பு போலே பொன்னானதூ..........
                                  இந்த வண்ணமயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுதூ..........