செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அவளால்..


Join Only-for-tamil
விழி மூடி எனக்குள் பேசும் மௌனம்

உடைந்த இதயத்தை அள்ளி
ஒட்டுப் போட்டுக் கொண்டு
மனம் தவிக்குது எதற்காக?

யோசிக்கிறேன்....
பூமியில் பாதம்  பரப்பிய தேவதை
என் முன் கடந்து சென்றதால்
மின்னல் மின்னி
 இடி இடித்தது என் நெஞ்சுக்குள்

இதுவரை நான் காணாத
புரியாத உலகம்
என் முன் கடந்து போனதை
 கண் இமைக்காமல் பார்த்தேன்.

ஆணி வேராக என்இதயத்தை
தாக்கிவிட்டுச் சென்றவள்
காணும் காட்சிகள் யாவும்
அவள் பிம்பமாக மாற்றி விட்டாள்.

எவ்வளவு முயன்றாலும்
அவள்  நினைவுகளில்
இருந்து நீந்தாமல்
இருக்க முடியவில்லை.

என் நினைவு அலைகளில்
அவள் கடல் அலைகளாக
நான் துடுப்பு இல்லை...
 படகோட்டியாக.

அன்புடன்,
ஸ்ரீமாரியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு